வைரலாகும் கங்குவா பட போஸ்டர்.
பிரபல நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. மேலும் 3D அனிமேஷனாக தயாராகி வரும் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது.
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யாவின் முகத்தை காட்டாமல் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் இந்தப் படத்தின் மீதுள்ள ஆவலால் ரசிகர்கள் சூர்யாவின் முகத்தை மிரட்டலான தோற்றத்தில் எடிட் செய்து போஸ்டர்களாக வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.


