Homeசெய்திகள்சினிமாஜனவரியில் வெளியாகும் டெஸ்ட் திரைப்படம்

ஜனவரியில் வெளியாகும் டெஸ்ட் திரைப்படம்

-

நடிகர் மாதவன் தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் நயன்தாரா ஆகியோரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ‘டெஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகை மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் மாதவன் உடன் இணைந்து நடிக்கிறார்.
தமிழ்ப்படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த சசிகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். பெண் இசையமைப்பாளரான சக்திஸ்ரீ கோபாலன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியானது. இந்நிலையில், இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ