Homeசெய்திகள்சினிமாசுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2… ரிலீஸ் தேதி அப்டேட்!

சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2… ரிலீஸ் தேதி அப்டேட்!

-

சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் ‘தலைநகரம்’ திரைப்படம் வெளியானது.
அந்தப் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். டி இமான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் ஜோதிர் மயி, பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலுவின் காமெடி இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரம் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.இந்த படத்திலும் சுந்தர் சி தான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் பலக் லால்வாணி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தலைநகரம் முதல் பாகத்தில் நடித்திருந்த வடிவேலு இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. முகவரி, நேபாளி, தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களை இயக்கிய VZ துரை தலைநகரம் 2 படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

மேலும் இவர் ஏற்கனவே சுந்தர் சி யின் நடிப்பில் இருட்டு திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக தலைநகரம் 2 படத்தில் சுந்தர் சியுடன் இணைந்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சுந்தர்சிக்கு இது ஒரு கம்பேக் படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘தலைநகரம் 2’ திரைப்படம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ