spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷை தொடர்ந்து சிம்பு எடுத்த அதிரடி முடிவு....STR50 அப்டேட்!

தனுஷை தொடர்ந்து சிம்பு எடுத்த அதிரடி முடிவு….STR50 அப்டேட்!

-

- Advertisement -

தனுஷை தொடர்ந்து சிம்பு எடுத்த அதிரடி முடிவு....STR50 அப்டேட்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். STR48 படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்காக சிம்பு தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் சிம்புவின் ஐம்பதாவது படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பாக மணிரத்தினம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கப் போவதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ஆனால் சிம்புவின் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.தனுஷை தொடர்ந்து சிம்பு எடுத்த அதிரடி முடிவு....STR50 அப்டேட்!

தற்போது சிம்பு STR50 திரைப்படத்தை தானே தயாரித்து இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி சிம்பு தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

நடிகர் தனுஷும் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். எனவே தனுஷை தொடர்ந்து சிம்புவின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ