- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாலிவுட்டில் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் முன்னணி நடிகர், நடிகைகளாக இந்தி திரையுலகில் வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து பாஜிரா மஸ்தானி, ராம் லீலா, என பல படங்களில் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர். இவர்கள் ராம் லீலா படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போதே, காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
