Homeசெய்திகள்சினிமாடெட்பூல் மற்றும் வொல்வரின் அதிரடி ஆக்‌ஷன் ட்ரைலர்... இணையத்தில் வைரல்...

டெட்பூல் மற்றும் வொல்வரின் அதிரடி ஆக்‌ஷன் ட்ரைலர்… இணையத்தில் வைரல்…

-

மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக உருவாகி இருக்கும் டெட்பூல் மற்றும் வொல்வரின் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலிவுட், மோலிவுட், பாலிவுட், டோலிவுட் இதில் எந்த மொழி ரசிகராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருமே நிச்சயம் ஹாலிவுட் படங்களுக்கு ரசிகர்களாக இருப்பர். அந்த வகையில் மார்வெல் மற்றும் டிசி உலகத்திலிருந்து வெளியாகும் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று உள்ளது. மார்வெல் யுனிவர்சில் இருந்து மற்றொரு சூப்பர் ஹீரோ திரைப்படம் உருவாகி உள்ளது. மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக டெட்பூல் மற்றும் வொல்வரின் படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே டெட்பூல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் அடித்தது தெரிந்ததே.

ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் ஜூலை மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் முன்னோட்டம் நல்ல வரவேற்பை பெற்றது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அதிரடி கதை அம்சத்தில் வழக்கமான சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. எம்மா கொரின், மொரீனா, ராப் டெலானி, லெஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டெட்பூல் மற்றும் வொல்வரின் திரைப்படம் வரும் ஜூலை மாதம் ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

MUST READ