spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்த அறிவிப்பு வருகிறது.... தயாரிப்பாளராக சிம்பு கொடுத்த அப்டேட்!

அடுத்த அறிவிப்பு வருகிறது…. தயாரிப்பாளராக சிம்பு கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் சிம்பு, அடுத்த அறிவிப்பு வருவதாக அப்டேட் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பாடகராகவும்
வலம் வருபவர் சிம்பு. இவர் தனது சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிக்க தொடங்கி தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அடுத்த அறிவிப்பு வருகிறது.... தயாரிப்பாளராக சிம்பு கொடுத்த அப்டேட்!அந்த வகையில் இவரை லட்சக்கணக்கான மக்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்று முதல் இன்றுவரையிலும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்பு தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் சிம்புவின் மாநாடு, மன்மதன் ஆகிய படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிம்புவின் பிறந்தநாளை கூடுதல் ஸ்பெஷலாக மாற்ற சிம்புவின் அடுத்தடுத்த மூன்று புதிய படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே நள்ளிரவு 12 மணிக்கு STR 49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அடுத்த அறிவிப்பு வருகிறது.... தயாரிப்பாளராக சிம்பு கொடுத்த அப்டேட்! அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்புவின் தயாரிப்பு நிறுவனமான ஆட்மேன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று மதியம் 12:12 மணி அளவில் புதிய அறிவிப்பு வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பு ஏற்கனவே நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருந்த STR 48 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ