Homeசெய்திகள்சினிமாதிரிஷாவின் 'தி ரோட்'.... மனதை உருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

திரிஷாவின் ‘தி ரோட்’…. மனதை உருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

-

- Advertisement -

தி ரோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி ரோட். அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். AAA சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு அமைத்துள்ளார். இதில் திரிஷாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். மேலும் மியா ஜார்ஜ், சபீர் கல்லாரக்கல், எம் எஸ் பாஸ்கர் விவேக் பிரசன்னா வேலராமமூர்த்தி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய நடித்துள்ளனர். மேலும் இப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தில் ஓ விதி எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இதனை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். கார்த்திக் நேதா இந்த பாடலை எழுதியுள்ளார்.
மனதை உருக்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

MUST READ