Homeசெய்திகள்சினிமாநிறங்கள் மூன்று; மார்ச் 3-ம் தேதி முன்னோட்டம்

நிறங்கள் மூன்று; மார்ச் 3-ம் தேதி முன்னோட்டம்

-

- Advertisement -

நிறங்கள் மூன்று; மார்ச் 3-ம் தேதி முன்னோட்டம்

அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது.

அதர்வா நாயகனாக நடிக்கும் நிறங்கள் மூன்று

மாறன், மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நிறங்கள் மூன்று. இந்த படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசை அமைக்கிறார்.

we-r-hiring

டப்பிங் பணிகள் தீவிரம்

நிறங்கள் மூன்று படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு அடைந்தது. இதை தொடர்ந்து, பின்னணி வேலைகள் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நிறங்கள் மூன்று படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் முன்னோட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வௌியிட்டு அறிவித்துள்ளது.

MUST READ