spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோலிவுட் அதிரப் போகுது... ரஜினிக்கு வில்லனாகும் பொன்னியின் செல்வன் நடிகர்!

கோலிவுட் அதிரப் போகுது… ரஜினிக்கு வில்லனாகும் பொன்னியின் செல்வன் நடிகர்!

-

- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய பணத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த் ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர்.

we-r-hiring

இந்தப் படத்தில் ரஜினி ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கிறதாம்.

தற்போது அப்டேட் என்னவென்றால் இந்த படத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வில்லன் தாபாத்திரம் இருக்கிறதாம். எனவே இந்தப் படத்தில் பெரிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் விக்ரமை அணுகியதாகக் கூறப்படுகிறது.

விக்ரம் இந்தப் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க ரஜினியும் ஒத்துக் கொண்டாராம். அதையடுத்து விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க படக்குழுவினர் கேட்டுள்ளனர். ஆனால் அவர் உடனே மறுத்துவிட்டாராம். கதையை கேட்ட பின்பு முடிவை சொல்லுமாறு சொல்லி இருக்கின்றனர். கதையை கேட்ட பிறகும் விக்ரம் படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.

இருப்பினும் விக்ரமை வில்லனாக நடிக்க வைக்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எனவே விரைவில் விக்ரம் ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாம் என்ற செய்தி வெளியாகும்!

MUST READ