தக் லைஃப் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் 234 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். நாயகன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணியும் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஐஷ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படமானது வருகின்ற ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும் இதன் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
#Thuglife Bookings open from tomorrow 8:01AM#ThuglifeFromJune5#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #Nasser @manjrekarmahesh… pic.twitter.com/zV2ZjOU8VP— Raaj Kamal Films International (@RKFI) May 31, 2025
எனவே இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தக் லைஃப் படத்தில் டிக்கெட் முன்பதிவு நாளை (ஜூன் 1) காலை 8.01 மணி அளவில் வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.