spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாராட்டு மழையில் நனையும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' .... முதல் வார வசூல் எவ்வளவு?

பாராட்டு மழையில் நனையும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ …. முதல் வார வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார் தற்போது மை லார்ட், ஃப்ரீடம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். பாராட்டு மழையில் நனையும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' .... முதல் வார வசூல் எவ்வளவு?இதற்கிடையில் இவர் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன், மிதுன், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருந்தனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களைத் தாண்டி எப்படி புதிய வாழ்க்கையை தொடங்குகிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று, பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.பாராட்டு மழையில் நனையும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' .... முதல் வார வசூல் எவ்வளவு? அந்த வகையில் இப்படம் முதல் வார முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 20 கோடியை கடந்திருப்பதாகவும், உலக அளவில் ரூ. 30 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை என்பதாலும், நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு பெருகுவதாலும், இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ