நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு திரிஷாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன. திரிஷா தற்போது ‘தி ரோடு’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் திரிஷா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தூங்கா நகரம் ,சிகரம் தொடு, இப்படை வெல்லும் போன்ற படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படம் கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் படமாகும். மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. மேலும் இந்த படம் ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது என்றும் இந்தப் படத்திற்கு ‘கொலை வழக்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


