திரிஷா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகை திரிஷா தற்போது மீண்டும் கோலிவுட்டில் மீண்டும் தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளார். பொன்னியின் செல்வனில் குந்தவையாக வந்து ரசிகர்கள் மனதை திருடிவிட்டார்.

திரிஷா தற்போது தி ரோடு என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் திரிஷா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷா நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

தூங்கா நகரம், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் திரிஷா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


