Homeசெய்திகள்சினிமாஒரு உன்னதமான படைப்பு..... 'வாழை' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஒரு உன்னதமான படைப்பு….. ‘வாழை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு உன்னதமான படைப்பு..... 'வாழை' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் மாரி செல்வராஜ் தனது தனித்துவமான திரைக்கதையின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பலரின் பாராட்டுகளைப் பெற்று முக்கியமான இயக்குனராக மாறினார். அதைத்தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தையும் இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். அடுத்தது மூன்றாவதாக இவர் இயக்கிய திரைப்படம் தான் வாழை. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தினை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தினை வெளியிட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டிருந்தார். இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது.ஒரு உன்னதமான படைப்பு..... 'வாழை' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! மேலும் சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குனர் மாரி செல்வராஜ், வாழை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ