Homeசெய்திகள்சினிமாவைபவ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!

வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!

-

வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

வைபவ் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சரோஜா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் ஹலோ நான் பேய் பேசுறேன், மேயாத மான், கப்பல், லாக்கப், பபூன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

தற்போது ரணம் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் ஷெரிஃப் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை மது நாகராஜன் தயாரிக்கிறார். மேலும் இதற்கு அரோல் கொரெல்லி இசையமைக்கிறார். இதில் வைபவுடன் இணைந்து தான்யா ஹோப் மற்றும் நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. வைபவின் 25 வது படமான இந்த படத்தின் தலைப்பில்
ரணம் அறம் தவறேல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ