spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபோதைப் பொருள் வழக்கு குறித்து வரலட்சுமி சரத்குமார் விளக்கம்!

போதைப் பொருள் வழக்கு குறித்து வரலட்சுமி சரத்குமார் விளக்கம்!

-

- Advertisement -

பிரபல நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது. அது குறித்து தற்போது தனது தரப்பிலான விளக்கத்தை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள விளிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கை விசாரித்து அதில் இலங்கை தமிழர்கள் 10 பேர் உள்பட 13 பேர் சேர்ந்த கும்பலை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக ஆதி லிங்கம் என்பவரை கைது செய்து விசாரித்தபோது அவர் நடிகை வரலட்சுமி என் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது தெரிய வந்தது. இதனால் நடிகை வரலட்சுமியின் பெயர் இந்த போதைப்பொருள் வழக்கில் அடிபட்டது. மேலும் சமூக வலைதளங்களில் வரலட்சுமிக்கு இது சம்பந்தமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வரலட்சுமி தான் சூட்டிங்ிற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஷூட்டிங் முடிந்ததும் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது.

we-r-hiring

இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார், ” எனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடம் வேலை செய்து வந்த அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பே வேலையில் இருந்து நின்று விட்டார். எனது தாயாரிடம் மட்டுமே என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு போதுமான ஒத்துழைப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் நான் வெளி மாநிலத்தில் இல்லை சென்னையில் தான் இருக்கிறேன். இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மைகளின் அடிப்படையில் தகவல்களை பகிருமாறு ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று ஒரு அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

MUST READ