spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது

வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது

-

- Advertisement -

வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வௌியிட்டு உள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்டம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் வரும் சிக்கல், தொழில் போட்டி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்.

we-r-hiring

இப்படத்தை தில்ராஜு தயாரித்தார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். முதல் நாளில் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்ததாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்தது. விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் நல்ல வருவாயை படம் ஈட்டியது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு இணையத்தில் பகிர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

MUST READ