வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த வீர தீர சூரன் திரைப்படம் நேற்று (மார்ச் 27) திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த இந்த படம் OTT உரிமம் தொடர்பான பிரச்சனை காரணமாக இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடைகளை எல்லாம் உடைத்து மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆனது வீர தீர சூரன். அருண்குமார் இந்த படத்தை வித்தியாசமான முறையில் ஆரம்பத்திலேயே இரண்டாம் பாகமாக வெளியிட்டிருக்கிறார். இவருடைய இந்த முயற்சி பாராட்டுக்குரியது. அதே சமயம் ரசிகர்கள் மத்தியில் இதன் மீதான எதிர்பார்ப்பும் ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் காத்திருந்த ரசிகர்களுக்கு தரமான தீனி போடும் வகையில் சொல்லி அடித்திருக்கிறார் அருண்குமார். நடிகர் விக்ரமை ரசிகர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அதேபோல் காட்டி கொண்டாட வைத்திருக்கிறார். விக்ரம் மட்டுமல்லாமல் சுராஜ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் தங்களின் நடிப்பில் பட்டையை கிளப்பி உள்ளனர்.
ஆக்சன் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. லேட்டாக வந்தாலும் வசூல் வேட்டையை தொடங்கி வெறித்தனமான ஆட்டம் ஆடி வருகிறது வீர தீர சூரன். அதன்படி இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூ 3.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ரம்ஜான் தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை இருக்கும் காரணத்தால் இப்படத்தின் வசூல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.