spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதோனி தயாரிப்பில் புதிய படம் இயக்கும் விக்னேஷ் சிவன்!

தோனி தயாரிப்பில் புதிய படம் இயக்கும் விக்னேஷ் சிவன்!

-

- Advertisement -

பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடைய கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதையடுத்து விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 ஆவது படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஆனால் வேறு சில காரணங்களுக்காக விக்னேஷ் சிவன் இதிலிருந்து விலகவே அவருக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் இணைந்துள்ளார்.

we-r-hiring

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன், பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் துவங்கியுள்ள தோனி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்திற்காக புதிய படம் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன், தோனி நடிப்பில் ஏற்கனவே விளம்பரப் படங்கள் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் ‘லவ் டுடே’ படத்தின் இயக்குனரும், கதாநாயகனுமான பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

MUST READ