Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் அடுத்த படம்.....ஃபர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் அடுத்த படம்…..ஃபர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய அறிவிப்பு!

-

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால் அதே சமயம் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விஜய் ஆண்டனிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதனால் செந்தூர் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மகளின் மறைவிற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய விஜய் ஆண்டனி தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

அதைத் தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்  செப்டம்பர் 28ஆம் தேதி (நாளை) வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ