Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' படப்பிடிப்பு நிறைவு ....வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ படப்பிடிப்பு நிறைவு ….வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஃபேமிலி ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' படப்பிடிப்பு நிறைவு ....வைரலாகும் புகைப்படங்கள்!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. கடைசியாக இவர் குஷி படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர்
ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சீதாராமம் பட புகழ் நடிகை மிர்ணாள் தாகூர் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' படப்பிடிப்பு நிறைவு ....வைரலாகும் புகைப்படங்கள்! கீத கோவிந்தம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் தேவரகொண்டா, பரசுராம் பெட்லா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். KU மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படம் 2024 ஏப்ரல் 5ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' படப்பிடிப்பு நிறைவு ....வைரலாகும் புகைப்படங்கள்!அதைத்தொடர்ந்து படத்தின் டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் ஃபேமிலி ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ