Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டாவின் பேமிலி ஸ்டார்... டீசர் அப்டேட் இதோ...

விஜய் தேவரகொண்டாவின் பேமிலி ஸ்டார்… டீசர் அப்டேட் இதோ…

-

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெலுங்கில் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் தன் திறமையால் மட்டுமே, இன்று இந்தியாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி பின்னர் டோலிவுட் திரையில் அறிமுகமாகினார். அவர் நடித்த பெல்லிசோப்புலூ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர். சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து விஜய் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றி விஜய் தேவரகொண்டாவை முன்னணி நடிகராக முன்னிறுத்தியது. லிகர் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரித்து இருந்தார். இருப்பினும், இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இறுதியாக விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து மூன்று படங்களில் அவர் கமிட்டாகி உள்ளார். அதில் ஒன்று பேமிலி ஸ்டார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். மிர்ணாள் தாகூர் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை பேமிலி ஸ்டார் படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ