Homeசெய்திகள்சினிமா'ஜனநாயகன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்.... TVK என கத்திய ரசிகர்கள்!

‘ஜனநாயகன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்…. TVK என கத்திய ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் விஜயின் 69 ஆவது படமாக ஜனநாயகன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்திலும் அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜனநாயகன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்.... TVK என கத்திய ரசிகர்கள்!அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, பாபி தியோல், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்.... TVK என கத்திய ரசிகர்கள்!இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் விஜய், ஜனநாயகன் படத்தை முடித்த பின்னர் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார். விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை தந்தாலும் அவர் சினிமாவை விட்டு விலகுவது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும் விஜயின் பழைய படங்கள் சமீபகாலமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜனநாயகன் திரைப்படத்தையும் திருவிழா போல் கொண்டாட காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் விஜய் பார்த்து ரசிகர்கள் TVK.. TVK என கத்தினர். அவர்களைப் பார்த்த விஜய், கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ