spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விஜய் சேதுபதியின் ரீல் மகள்..... சூப்பரான அப்டேட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விஜய் சேதுபதியின் ரீல் மகள்….. சூப்பரான அப்டேட்!

-

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இதன் முதல் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விஜய் சேதுபதியின் ரீல் மகள்..... சூப்பரான அப்டேட்!பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க முடியாது என கனத்த இதயத்துடன் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார் கமல்ஹாசன். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது. தற்போது இது தொடர்பான அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பூனம் பாஜ்வா, ரஞ்சித், குரேஷி, அமலா சாஜி, மா.கா.பா என பலர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விஜய் சேதுபதியின் ரீல் மகள்..... சூப்பரான அப்டேட்! இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த சீசனில் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகள் கலந்து கொள்ளப் போகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த ஜூன் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்த மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்த சஞ்சனா தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ளப் போகிறாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அதே சமயம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே மகாராஜா படத்தின் மூலம் பிரபலமான சஞ்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்வார் என்று நம்பப்படுகிறது.

MUST READ