Homeசெய்திகள்சினிமாபடம் முழுக்க லேடி கெட்டப்பில் நடிக்கும் விஜய் டிவி பிரபலம்..... 'தேசிங்கு ராஜா 2' அப்டேட்!

படம் முழுக்க லேடி கெட்டப்பில் நடிக்கும் விஜய் டிவி பிரபலம்….. ‘தேசிங்கு ராஜா 2’ அப்டேட்!

-

- Advertisement -

படம் முழுக்க லேடி கெட்டப்பில் நடிக்கும் விஜய் டிவி பிரபலம்..... 'தேசிங்கு ராஜா 2' அப்டேட்!கடந்த 2013 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் நல்லதொரு நகைச்சுவைப் படமாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்கியிருந்த நிலையில் இதில் விமலுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். சூரி, ரவி மரியா காம்போவின் காமெடிகள் அனைத்துமே அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எழில் இயக்கத்தில் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஆர் செல்வா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதையில் உருவாகி வருகிறது. படம் முழுக்க லேடி கெட்டப்பில் நடிக்கும் விஜய் டிவி பிரபலம்..... 'தேசிங்கு ராஜா 2' அப்டேட்!அதேசமயம் சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டு இருந்தனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதேசமயம் இந்த போஸ்டரில் குக் வித் கோமாளி புகழ் லேடி கெட்டப்பில் இருந்தார். இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி படம் முழுக்கவே குக் வித் கோமாளி புகழ் லேடி கெட்டப்பில் நடிப்பதாக கூறப்படுகிறது.

புகழ், விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் லேடி கெட்டப்பில் வந்து நகைச்சுவை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்க லேடி கெட்டப்பில் நடிக்கும் விஜய் டிவி பிரபலம்..... 'தேசிங்கு ராஜா 2' அப்டேட்!அது மட்டும் இல்லாமல் புகழுக்கு லேடி கெட்டப் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அதனால்தான் இயக்குனர் எழில் இந்த கதாபாத்திரத்திற்கு புகழை தேர்வு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே தேசிங்கு ராஜா 2 படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளால் திரையரங்கமே சிரிப்பொலியில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ