spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்ரம், மடோன் அஸ்வின் கூட்டணியின் புதிய படம்.... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

விக்ரம், மடோன் அஸ்வின் கூட்டணியின் புதிய படம்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

-

- Advertisement -

விக்ரம் மற்றும் மடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.விக்ரம், மடோன் அஸ்வின் கூட்டணியின் புதிய படம்.... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து விக்ரம் தனது 63வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தினை மடோன் அஸ்வின் இயக்க உள்ளார் என்று சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது.

we-r-hiring

இயக்குனர் மடோன் அஸ்வின், கடந்த 2021ல் யோகி பாபு நடிப்பில் மண்டேலா எனும் திரைப்படத்தை இயக்கி பிரபலமானார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். அடுத்தது இவர் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம், மடோன் அஸ்வின் கூட்டணியின் புதிய படம்.... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் சியான் 63 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் எனவும்இனிவரும் நாட்களில் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ