spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஓடிடி தளத்திற்கு வரும் புலிக்குத்தி பாண்டி திரைப்படம்

ஓடிடி தளத்திற்கு வரும் புலிக்குத்தி பாண்டி திரைப்படம்

-

- Advertisement -
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவான திரைப்படம் புலிக்குத்தி பாண்டி. கலாநிதிமாறன், முத்தையா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். படத்தில், சமுத்திரகனி, சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார். கடந்த 2021-ம் ஒட்டி சன் டிவியில் நேரடியாக இத்திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது டிஆர்பி ரேட்டிங்கில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது.
இந்நிலையில், புலிக்குத்தி பாண்டி திரைப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ