spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராமர் கோயில் திறப்பு..... பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்!

ராமர் கோயில் திறப்பு….. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்!

-

- Advertisement -

நேற்று (ஜனவரி 22) அன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி முன்னணியில் நடத்தப்பட்ட இந்த விழா இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், தனுஷ், ரிஷப் செட்டி , கங்கனா, சச்சின் டெண்டுல்கர், முகேஷ் அம்பானி என்ன பல பிரபலங்கள் பங்கேற்றனர்.ராமர் கோயில் திறப்பு..... பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்!

இந்நிலையில் நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் விஷால் கூறியிருப்பதாவது, மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மற்றொரு சிறந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். ராமர் கோயில் பல ஆண்டுகளாகவும் தலைமுறைகளாகவும் நினைவு கூறப்படும். இந்த அற்புதமான தருணத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அனைவருக்கும் இங்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள். சல்யூட் யூ” என்று பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கி வரும் ரத்னம் (விஷால் 34)
படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ