spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜே சித்து.... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜே சித்து…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

-

- Advertisement -

வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜே சித்து.... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

விஜே சித்து vlogs என்ற யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான். இவர்களின் வீடியோ பெரும்பாலும் இளைஞர்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால் இவர்கள் போடும் வீடியோவிற்கு லைக்ஸ் அள்ளும். அதிலும் புதிய படங்களை ப்ரொமோட் செய்யும் விதமாக இவர்கள் வெளியிடும் மொட்டை மாடி பார்ட்டி வீடியோ பலரையும் கவரும். இந்நிலையில் தான் இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜே சித்து.... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!இதைத்தொடர்ந்து விஜே சித்து புதிய படம் ஒன்றை தானே இயக்கி நடிக்கப் போகிறார் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் ஹர்ஷத் கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

we-r-hiring

இது தவிர வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கப் போகிறது என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் விரைவில் அடுத்த அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பு விஜே சித்துவின் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ