Homeசெய்திகள்சினிமாதமிழில் டப் செய்யப்பட்ட பிரேமலு... புதிய பாடல் வெளியீடு...

தமிழில் டப் செய்யப்பட்ட பிரேமலு… புதிய பாடல் வெளியீடு…

-

தமிழில் டப் செய்யப்பட்டுள்ள பிரேமலு திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

அண்மைக் காலமாக மலையாளத்தில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். வெளியாகும் மொழி மலையாளமாக இருந்தாலும், படம் கேரள ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வெற்றி பெறுகிறது. இறுதியாக வெளியான பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் பிரேமலு ஆகிய படங்கள் இதுவரை இல்லாத வகையில் வசூலை குவித்து மலையாள சினிமாவில் சாதனைகளை படைத்து வருகின்றன. இதில் பிரேமலு திரைப்படம் கடந்த 9-ம தேதி திரையரங்குகளில் வெளியானது.

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜூ, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். கிறிஸ் ஏ.டி. இத்திரைப்படத்தை இயக்கி இருக்கின்றனர். படத்தை ஃபஹத், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். விஷ்ணு இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் மலையாளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பை பெற்ற படம் தொடர்ந்து தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. மேலும், இத்திரைப்படம் வரும் மார்ச் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. காதல், நகைச்சுவை என கலக்கலாக வெளியான இத்திரைப்படத்தை நட்சத்திரங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

MUST READ