spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇது கூட நல்லா இருக்கே.... 'ஜனநாயகன்' படத்தில் விஜயின் பெயர் என்னன்னு தெரியுமா?

இது கூட நல்லா இருக்கே…. ‘ஜனநாயகன்’ படத்தில் விஜயின் பெயர் என்னன்னு தெரியுமா?

-

- Advertisement -

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இது கூட நல்லா இருக்கே.... 'ஜனநாயகன்' படத்தில் விஜயின் பெயர் என்னன்னு தெரியுமா?

நடிகரும் அரசியல்வாதியுமாக வலம் வரும் விஜய் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தனது 69 வது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் விஜயின் கடைசி படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இறுதிக்கட்டத்தை நெருங்கிய 'ஜனநாயகன்' படப்பிடிப்பு! கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்னும் சில நாட்களில் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகி வருகிறது. இது தவிர இந்த படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஜனநாயகன் திரைப்படத்தில் ‘தளபதி வெற்றி கொண்டான்’ (TVK) என்பதுதான் விஜயின் கேரக்டர் பெயர் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.இறுதிக்கட்டத்தை நெருங்கிய 'ஜனநாயகன்' படப்பிடிப்பு! ஏற்கனவே இந்த படமானது அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் நிலையில் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஜனநாயகன் படத்தில் விஜயின் நிஜ வாழ்க்கை அரசியல் ரெஃபரன்ஸ்கள் அதிகம் இருக்கும் போல் தெரிகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜயின் பெயர் என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

we-r-hiring

ஜனநாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ