குட் பேட் அக்லி படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்தின் 63வது படமாக உருவாகி இருந்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெயரையும் புகழையும் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் இந்த படம் வெளியானது. அதாவது இந்த படத்தில் அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக், அஜித்தை ரசித்து ரசித்து இயக்கியிருக்கிறார். அதன்படி ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படி எல்லாம் காட்டி இருந்தார். அஜித்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலகலப்பான கேரக்டரில் பார்க்க முடிந்தது. எனவே இந்த படம் ஒரு பக்கம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மற்றொரு பக்கம் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடினர். அதன்படி இப்படமும் உலக அளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக படக்குழுவும் அறிவித்தது. இது தவிர வருகின்ற மே மாதம் 8 அல்லது 9ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் உலக அளவில் தற்போது வரை ரூ. 280 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. நாளை (மே 1) சூர்யாவின் ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் 3 ஆகிய படங்கள் திரைக்கு வருவதால் குட் பேட் அக்லி படத்திற்கு திரையரங்குகளில் இன்றுடன் முடிவு கட்டப்படும். மேலும் இப்படம் ரூ.500 கோடியை கடந்து விடும் என்று எதிர்பார்க்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இருப்பினும் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.