தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்திய அளவில் பிரபலமாகி இமாலய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் தேவரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது. அடுத்தது இவர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் தன்னுடைய 31வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து வார் 2 திரைப்படத்தில் நடிக்கிறார். இவ்வாறு ஜூனியர் என்டிஆரின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக ஜூனியர் என்டிஆர், பிரபல தமிழ் பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
வெற்றிமாறன், நெல்சன் ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர் தன்னுடைய அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “என்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் பெயர் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ஜூனியர் என்டிஆர் குறிப்பிட்டது இயக்குனர் நெல்சன் தான் என்று ஒரு சிலர் கமெண்ட் செய்து வரும் நிலையில், அவர் குறிப்பிட்டது வெற்றிமாறனாகவும் இருக்கலாம் என்றும் சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.