Homeசெய்திகள்சினிமாயோகி பாபு நடிக்கும் புதிய படம்.... கதாநாயகி யார் தெரியுமா?

யோகி பாபு நடிக்கும் புதிய படம்…. கதாநாயகி யார் தெரியுமா?

-

நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் பூமர் அங்கிள், தூக்குதுரை, மிஸ் மேகி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் மற்றொரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, நிதின் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை எஸ் ஜே சூர்யா வின் பொம்மை படத்தை இயக்கிய ராதா மோகன் இயக்க உள்ளார். ‘சட்னி சாம்பார்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேசன் சார்பில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய அஜேஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று தொடங்கிய நிலையில் விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. மேலும் இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

MUST READ