Homeசெய்திகள்சினிமாயோகி பாபு, சிம்பு தேவன் கூட்டணியின் புதிய படம்..... டைட்டில் குறித்த அப்டேட்!

யோகி பாபு, சிம்பு தேவன் கூட்டணியின் புதிய படம்….. டைட்டில் குறித்த அப்டேட்!

-

யோகி பாபு, மண்டேலா படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். அதன்படி தூக்குதுரை, பூமர் அங்கிள், மிஸ் மேகி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் ‘சட்னி சாம்பார்’ என்ற புதிய படத்தில் வாணி போஜனுடன் இணைந்து நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யோகி பாபு மற்றொரு படத்தில் நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய படத்திற்கு ‘போட்‘ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், இப்படம் கடலில் ஒரு படகில் நடக்கும் கதையாக உருவாகிறது என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி உள்ளிட்ட பேண்டஸி படங்களை இயக்கிய சிம்பு தேவன் இயக்குகிறார். படத்தில் யோகி பாபு உடன் இணைந்து கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சிம்பு தேவன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் மாலி & மான்வி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. படத்தில் ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தின் டைட்டில் லுக் வீடியோவை இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்டுள்ளனர். மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ