ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற நெல்லையைச் சேர்ந்த பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரைப் பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சிக்கான பாதுகாப்புப் பணியில் நெல்லையைச் சேர்ந்த பெண் காவலரும் ஈடுபட்டிருந்தார்.
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், காவலர்கள் வேனில் நெல்லைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பெண் காவலர் புகார் அளித்துள்ளார்.
பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், சிறப்பு எஸ்.ஐ. குமார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புகாரைத் தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ. குமாரைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற பெண் காவலருக்கே சக காவல் அதிகாரியால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் சிக்கிய பிரபல ஆட்டோ திருடன் ‘மிட்டாய் அஜித்’!
