Homeசெய்திகள்க்ரைம்Grindr செயலி மூலம் அறிமுகம்... கத்தி முனையில் மிரட்டி பணம், தங்க நகைகள் பறிப்பு! 3...

Grindr செயலி மூலம் அறிமுகம்… கத்தி முனையில் மிரட்டி பணம், தங்க நகைகள் பறிப்பு! 3 பேர் கைது!

-

- Advertisement -

GPay மூலம் ரூ.42 ஆயிரம் பறிப்பு – 2 சவரன் தங்கச் சங்கிலி, தங்கக் கடுக்கன் கொள்ளை – பட்டா கத்தி, செல்போன் பறிமுதல்!Grindr செயலி மூலம் அறிமுகம்... கத்தி முனையில் மிரட்டி பணம், தங்க நகைகள் பறிப்பு! 3 பேர் கைது!

Grindr செயலி மூலம் அறிமுகமாகி, இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளைப் பறித்த மூன்று பேரை மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

we-r-hiring

சென்னை கொடுங்கையூரில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு Grindr செயலி மூலம் மூன்று பேர் அறிமுகமாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 29.03.2026 அன்று பெரியமாத்தூர், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தங்களது வீட்டிற்கு அந்த இளைஞரை வரவழைத்துள்ளனர்.

கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பு!

வீட்டிற்குச் சென்ற இளைஞரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, நிர்வாணப்படுத்தியதுடன், அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர், அவரது வங்கிக் கணக்கிலிருந்து GPay மூலம் ரூ.42 ஆயிரத்தைப் பறித்துள்ளனர்.

மேலும், அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் தங்கக் கடுக்கன் ஆகியவற்றையும் பறித்துச் சென்றுள்ளனர்.

ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவில் தனிப்படை!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில், M2 மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆவடி காவல் ஆணையாளர் T. செந்தில்குமார் உத்தரவின்பேரில், மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

மூன்று பேர் கைது – ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல்!

தனிப்படை போலீசாரின் விசாரணையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சென்னை KK தாழையைச் சேர்ந்த கீர்த்திவாசன் (28), மாதவரம் பொன்னியம்மன் மேட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (28), பெரம்பூரைச் சேர்ந்த ஆகாஷ் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம், ஒரு தங்கக் கடுக்கன், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய செல்போன் மற்றும் ஒரு பட்டா கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

புழல் சிறையில் அடைப்பு!

கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Grindr செயலி மூலம் அறிமுகமாகி இளைஞரை மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளைப் பறித்த சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் டேவிட் கொலை வழக்கு: சிறையில் இருந்தபடியே கூலிப்படையை ஏவியதாகக் கூறப்படும் தீனா, அமிர்தராஜ் கைது! நவம்பர் 13 வரை நீதிமன்றக் காவல்!

MUST READ