Homeசெய்திகள்க்ரைம்திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை! சகோதரர்கள் இருவர் கைது

திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை! சகோதரர்கள் இருவர் கைது

-

- Advertisement -

திருவள்ளூர் அருகே நான்கு வீடுகளின் பூட்டுகளை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்ததாகச் சகோதரர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை! சகோதரர்கள் இருவர் கைது

அவர்களிடம் புல்லரம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

4 வீடுகளின் பூட்டுகளை உடைத்துக் கொள்ளை

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் டெய்லராகப் பணியாற்றி வரும் முரளி என்பவரின் வீட்டிலும், அப்பகுதியில் அருகருகே உள்ள மேலும் மூன்று வீடுகளிலும் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மொத்தம் நான்கு வீடுகளில் இருந்து இரண்டு சவரன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்கள் இருவர் கைது

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான அழகு என்ற வீரேந்திர ராஜன் (19), சீனிவாச மூர்த்தி (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை

கைது செய்யப்பட்ட இருவரிடமும் புல்லரம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டரை வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை!

MUST READ