Homeசெய்திகள்மாவட்டம்தேர்தல் பறக்கும் படை சோதனை – ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.47 லட்சம் உள்ளிட்ட பணம்...

தேர்தல் பறக்கும் படை சோதனை – ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.47 லட்சம் உள்ளிட்ட பணம் பறிமுதல்!

-

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் மட்டும் ரூ.47 லட்சம் பணம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ராமாபுரம் பகுதியில் ரூ.31.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அச்சரப்பாக்கம் பகுதியில் ரூ.2 லட்சமும், சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ரூ.13 லட்சமும், எலப்பாக்கம் அருகே ரூ.80 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் மட்டும் 9 பறக்கும் படை குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருட்கள் சோதனையின்போது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, உரிய தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியதற்கு நன்றி – திருமாவளவன்

MUST READ