Homeசெய்திகள்மாவட்டம்செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடல் – மாவட்ட நிர்வாகம்...

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

-

- Advertisement -

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை 4 நாட்களுக்கு மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

அதன்படி, அக்டோபர் 4-ம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.

மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்படும் அக்டோபர் 9-ம் தேதியும் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனைக்கு தடை அமலில் இருக்கும்.

தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நாட்களில் விதிகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள், பார்கள் அல்லது பிற உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் 4, 5, 6 மற்றும் 9 ஆகிய 4 நாட்களும் மதுபான விற்பனை நிலையங்கள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

“தோல்வி பயத்தால் பல இடங்களில் பிரசாரம் செய்கிறார் விஜய்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

MUST READ