Homeசெய்திகள்மாவட்டம்செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 43 நாட்களாகியும் துப்பு கிடைக்கவில்லை –...

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 43 நாட்களாகியும் துப்பு கிடைக்கவில்லை – கர்நாடகாவில் வேலை செய்யும் இளைஞரிடம் 3-வது முறையாக சிபிசிஐடி விசாரணை!

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி காணாமல் போய் 43 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், கர்நாடகாவில் வேலை செய்து வரும் ரேணு என்ற இளைஞரிடம் சிபிசிஐடி போலீசார் மூன்றாவது முறையாக விசாரணை நடத்தியுள்ளனர்.

அக்டோபர் 12-ஆம் தேதி சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிறுமி காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

33-வது நாளாகத் தொடரும் சிபிசிஐடி விசாரணை

சிறுமி காணாமல் போய் 43 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர் குறித்த எந்தத் துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் முக்கியத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில் சந்தேகத்திற்குரிய தொடர்புகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் வேலை செய்யும் இளைஞரிடம் 3-வது முறையாக விசாரணை

இந்த நிலையில், சிறுமியின் எதிர் வீட்டில் வசிக்கும் மஞ்சுளா என்ற பெண்ணின் உறவினரான ரேணு என்ற இளைஞரிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் வேலை செய்து வரும் அந்த இளைஞரை விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து, சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் மூன்றாவது முறையாக விசாரித்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி காணாமல் போன வழக்கில் இதுவரை உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 41 நாட்களாகியும் கிடைக்காத தடயம் – 31-வது நாளாக சிபிசிஐடி விசாரணை!

MUST READ