Homeசெய்திகள்மாவட்டம்விஜய் டிவி பாலாவுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்? – உளுந்தூர்பேட்டையில்...

விஜய் டிவி பாலாவுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்? – உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

-

- Advertisement -

கடை திறப்பு விழாவில் சலசலப்புவிஜய் டிவி பாலாவுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்? – உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த விஜய் டிவி புகழ் பாலாவுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை, அங்கிருந்த பவுன்சர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.

we-r-hiring

பவுன்சரின் செயலுக்கு கண்டனம்

விழாவுக்கு வந்த பாலாவுடன் புகைப்படம் எடுக்க ஆட்டோ ஓட்டுநர் முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பவுன்சரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொது நிகழ்ச்சிகளில் பிரபலங்களைக் காண வரும் பொதுமக்களிடம் பாதுகாப்புப் பணியாளர்கள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.

இருப்பினும், தாக்குதல் தொடர்பான முழுமையான விவரங்களும் சம்பந்தப்பட்டவர்களின் விளக்கங்களும் வெளியாகவில்லை.

தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு திமுக நிர்வாகிகள் முட்டுக்கட்டை! – தவெக எம்எல்ஏ சுகுமார் குற்றச்சாட்டு

MUST READ