Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில், புதிய வகை கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில், புதிய வகை கொரோனா தொற்று உறுதி

-

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி லட்சுக்கணக்கானோரின் உயிரை பறித்தது.

பின்னர் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக வைரஸ் பரவுதல் கட்டுக்குள் வந்தது. இதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்தது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி

இந்நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸானது கே.பி.1 மற்றும் கே.பி. 2  வகை என உருமாற்றமடைந்து அதிக அளவில் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் கடந்த 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 25 ஆயிரத்து 900 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவ தொடங்கி இருக்கிறது. அதன்படி இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி

இவர்களில் 290 பேர் கே.பி-2 வகை கொரோனாவாலும் 34 பேர் கே.பி.1 வகை கொரோனாவாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 36 பேரும், ராஜஸ்தானில் 26 பேரும், உத்தராகண்டில் 16 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் யாருக்கும் தீவிரமான பாதிப்புகள் இல்லை என்றும், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

MUST READ