Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் திருட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் திருட்டு

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கி கொண்டுருந்தபோது ரூ. 2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

we-r-hiring

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும் கவுண்டர்கள் கோயிலின் மேற்கு மாட வீதியை ஒட்டி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் பக்தர்களுக்கு தொடர்ந்து லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 36 வது எண் கவுண்டரில் டூட்டி முடித்து கொண்டு லட்டு விற்பனை செய்யப்பட்ட பணத்துடன் கவுண்டரில் தூங்கிக்கொண்டிருந்தபோது 2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

தூக்கம் விழித்து பார்த்த ஊழியர் பணம் இல்லாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் விஜிலன்ஸ் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ