Homeசெய்திகள்இந்தியாஅதானி குழுமத்தால் வங்கிகளுக்கு பாதிப்பா?- அறிக்கை கேட்கும் ஆர்பிஐ

அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு பாதிப்பா?- அறிக்கை கேட்கும் ஆர்பிஐ

-

- Advertisement -

அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

adani

அதானி குழும விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. அவை நடவடிக்கைகளை ஒத்துவைத்துவிட்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தின. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ள நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

we-r-hiring

parliament

20 ஆயிரம் கோடி தொடர் பங்கு வெளியீட்டை அதானி நேற்று திரும்ப பெற்ற நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் 6-வது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளன. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததை அடுத்து 6-வது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளன. இந்நிலையில் அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Home

அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.190 குறைந்து ரூ.1,918 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் அதாவது ரூ.1,338 சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 50 சதவீதம் அதாவது ரூ.1,909 குறைந்து ரூ.1,932 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

MUST READ