Homeசெய்திகள்இந்தியாஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புத்தாண்டு பரிசு- 42 விமான சேவை

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புத்தாண்டு பரிசு- 42 விமான சேவை

-

சென்னை-டெல்லி-சென்னை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம், புத்தாண்டு பரிசாக, 02ம் தேதி திங்கள் கிழமையிலிருந்து 4 புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இதை அடுத்து சென்னை-டெல்லி- சென்னை இடையே  தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 7:50  மணிக்கும், மாலை 3:40 மணிக்கும் 2 இரண்டு விமானங்கள் சென்னை-டெல்லி இடையே புதிதாக இயக்கப்படுகின்றன.

அதைப்போல் டெல்லி-சென்னை இடையே பிற்பகல் 2:45 மணி, இரவு 10:35 மணி ஆகிய நேரங்களில் இரண்டு புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து டெல்லி சென்று வரும் பயணிகளின் வசதிக்காக, ஏர் இந்தியா நிறுவனம் புத்தாண்டு பரிசாக ஒரே நாளில் 4 புதிய விமான சேவைகளை 2ம் தேதியிலிருந்து இயக்கத் தொடங்கியுள்ளது.

சென்னை-டெல்லி-சென்னை இடையே பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஏற்கனவே சென்னை-டெல்லி இடையே 19 விமான சேவைகளும், டெல்லி-சென்னை இடையே 19 விமான சேவைகளும், மொத்தம் 38 விமான சேவைகள் இயங்கிக் கொண்டு இருந்தன.

ஆனால் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பயணிகளின் நலன் கருதி ஏர் இந்தியா விமான நிறுவனம், மேலும் 4 விமான சேவைகளை புதிதாக தொடங்கியுள்ளது.

இதை அடுத்து தற்போது சென்னை-டெல்லி-சென்னை இடையே தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

MUST READ