Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி கோயிலுக்கு ரூ.27.50 கோடியில் 25 மின்சாரப் பேருந்துகள்: ஆனந்த் அம்பானி நிதியுதவி

திருப்பதி கோயிலுக்கு ரூ.27.50 கோடியில் 25 மின்சாரப் பேருந்துகள்: ஆனந்த் அம்பானி நிதியுதவி

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சார்பில், சுமார் 27.50 கோடி ரூபாய் மதிப்பிலான 25 மின்சாரப் பேருந்துகள் (Electric Buses) உபயமாக வழங்கப்படவுள்ளன. ​ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஆனந்த் அம்பானி, இன்று அதிகாலை திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற புகழ்பெற்ற சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவருக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் வேத ஆசி வழங்கி, தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

ஆனந்த் அம்பானி

we-r-hiring

​இலவச “தர்ம ரத” பேருந்துகள்:
தரிசனத்திற்குப் பிறகு தேவஸ்தான அதிகாரிகளைச் சந்தித்த ஆனந்த் அம்பானி, திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.27.50 கோடி மதிப்பில் 25 புதிய மின்சாரப் பேருந்துகளை ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
​மேலும், இந்தப் பேருந்துகளுக்கான பிரத்யேக மின்சார சார்ஜிங் நிலையங்களை (Charging Stations) அமைப்பதற்கான செலவுகளையும், இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கான (Drivers) மாதச் சம்பளத்தையும் ரிலையன்ஸ் நிறுவனமே முழுமையாக ஏற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

​இந்த 25 மின்சாரப் பேருந்துகளையும், திருமலைக்கு வரும் பக்தர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக, கட்டணமில்லா இலவச பேருந்துகளாக (தர்ம ரதம்) இயக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் திருமலையில் காற்று மாசைக் குறைப்பதோடு, பக்தர்களின் போக்குவரத்தும் இனிமையாக அமையும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ