Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல்: தெலுங்கு தேசம் – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே...

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல்: தெலுங்கு தேசம் – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல்; மண்டை உடைப்பு!

-

- Advertisement -

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. புங்கனூரில் நடைபெற்ற மோதலில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

ஆந்திரப் பிரதேசத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

புங்கனூரில் வாகனங்கள் மீது தாக்குதல்!

புங்கனூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதி உறுப்பினர் மிதுன் ரெட்டியுடன் அக்கட்சியினர் சென்றுள்ளனர். அப்போது, அவர்களைத் தெலுங்கு தேசம் கட்சியினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, மிதுன் ரெட்டியின் வாகன அணிவகுப்பில் வந்த கார்கள் மீது கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் சுமார் 10 வாகனங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசார் வேடிக்கை பார்த்ததாகக் குற்றச்சாட்டு!

இந்த மோதலின்போது பலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்களும் வெளியாகியுள்ளன. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டிருப்பது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 1 முதல் புதிய விதி! யார் போன் செய்தாலும் பெயர் திரையில் தெரியும் – மத்திய அரசு அதிரடி!

MUST READ