Homeசெய்திகள்இந்தியா“பாஜக தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தாலும்...” ஆவேசமான டி.கே. சிவக்குமார்! “அமைதியின்மையை உருவாக்காதீர்கள்” – பரபரப்பு

“பாஜக தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தாலும்…” ஆவேசமான டி.கே. சிவக்குமார்! “அமைதியின்மையை உருவாக்காதீர்கள்” – பரபரப்பு

-

- Advertisement -

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, பாஜக தலைவர்களை அம்மாநில துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன் மீது அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

பட்டாசு வெடிக்கக் கூடாது என எச்சரிக்கை

கர்நாடக மாநிலம் டி.நரசிபுரா டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், மசூதிக்கு முன்பு பட்டாசு வெடிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது என காவல்துறை கூறியதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது.

“மாநில நலன் மீது அக்கறை இல்லை”

இந்த விவகாரம் தொடர்பாக டி.கே. சிவக்குமார் பேசுகையில், பாஜக தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தாலும் அதில் மாநிலத்தின் நலனை காக்கும் எண்ணம் இருக்காது என கடுமையாக விமர்சித்தார்.

மாநில நலன் சார்ந்த விஷயங்களை முதலில் விவாதித்துவிட்டு அரசியல் செய்யுமாறு கூறினாலும், பாஜக தலைவர்கள் அனைத்திலும் குறை காண்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

“காவல்துறை எச்சரிக்கை விடுத்ததில் தவறில்லை”

எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தில்தான் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்ததாக டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரி செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“பாஜக மக்களைத் தூண்டிவிடுகிறது”

பாஜக இந்த விவகாரத்தை வீதிக்கு கொண்டு வந்துவிட்டதாக குற்றம்சாட்டிய சிவக்குமார், மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்கும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் அரசியலமைப்பு ரீதியான முக்கிய பதவியை வகிப்பதால், அவரிடமிருந்து கண்ணியமான அணுகுமுறையை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“அரசியல் செய்யுங்கள்… ஆனால் அமைதியின்மையை உருவாக்காதீர்கள்!”

பாஜக அரசியல் செய்யவும், போராட்டங்களை நடத்தவும் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறிய டி.கே. சிவக்குமார், அதே நேரத்தில் மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்கவோ, கர்நாடகாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவோ கூடாது என கேட்டுக்கொண்டார்.

கர்நாடகாவின் நற்பெயர் இந்தியாவின் பிம்பத்துடனும் தொடர்புடையது என்றும், மாநிலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்கள் நாட்டையே பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: “அரசு ஊழியர் அல்ல” என சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

MUST READ